
ஷான் 'டிடி' காம்ப்ஸ் பாலியல் கடத்தலுக்கு 50 மாத சிறைத்தண்டனை
அமெரிக்க ஹிப்-ஹாப் உலகின் ஜாம்பவான் ஷான் 'டிடி' காம்ப்ஸ் (55), பஃப் டாட்டி மற்றும் பி. டிடி என்ற பெயர்களில் அறியப்பட்டவர், பாலியல் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக 50 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்ததன்படி, நியூயார்க் தெற்கு மாவட்ட பெடரல் நீதிமன்ற நீதிபதி அருண் சுப்ரமணியன், காம்ப்ஸுக்கு 50 மாத சிறைத்தண்டனையும், 5 ஆண்டுகள் நிபந்தனை காலமும் விதித்தார்.
"பெண்களுக்கு எதிரான சுரண்டல் மற்றும் வன்முறைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற செய்தியை குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தெரிவிக்க ஒரு குறிப்பிடத்தக்க தண்டனை அவசியம்" என்று நீதிபதி சுப்ரமணியன் கூறினார்.
'ஃப்ரீக் ஆஃப்' என்று அறியப்பட்ட 'பாலியல் விருந்துகளை' ஏற்பாடு செய்து, தனது காதலிமார்களுக்கும் பணியமர்த்தப்பட்ட ஆண்களுக்கும் இடையே பாலியல் உறவுகளுக்காக பயண அட்டவணையை மாற்றியமைத்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டதிலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் தடுப்புக்காவலில் இருந்தார்.
rapper மற்றும் தயாரிப்பாளராக 1990 களில் இருந்து அமெரிக்க ஹிப்-ஹாப் உலகில் பெரும் புகழைப் பெற்றவர் காம்ப்ஸ்.
இந்த தீர்ப்பைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலரும் தாங்கள் போற்றிய கலைஞருக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்ததில் மிகுந்த ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். சிலர் மேல்முறையீடுகள் மற்றும் அவரது தொழில் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஊகித்து வருகின்றனர், மற்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நம்புகின்றனர்.